The Medical Branch of Salem Division, Southern
Railway, conducted the 2nd Heart Care Camp for its employees and
their family members today (04.09.2015) in which about 200 Salem Division
employees and their family members were screened for symptoms of heart
ailments. Tests such as blood sugar, blood pressure, echo cardiogram and ECG
were carried out on the attendees. They were checked for symptoms such as chest
pains, difficulty in breathing, irregular pulse, pain in shoulders, giddiness
or sweating for no visible reasons.
About 30 persons were diagnosed to have serious heart ailments and have
been advised further medical care such as undergoing angioplasty/cardiac
surgery, depending upon the exigency.
During the Heart Care Camp, Dr. Lakshmi
Jain, Dr. Sudhakar, of Bangalore Narayana Hridayalaya, along with their team of
technicians, carried out screening of people, along with Dr.M. Narasimham,
Addl. Chief Medical Superintendent, Salem Division, Southern Railway.
Salem Division Employees and their family
members expressed their satisfaction over the care taken by Railway
administration in their health by conducting such special care camps.
இரயில்வே ஊழியர்கள்
மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக இன்று (4 செப்டம்பர் 2015 வெள்ளிக்கிழமை)
தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மருத்துவத்துறை பங்களூர் நாராயண ஹிருதயாலயா
மருத்துவமனையுடன் இணைந்து இரண்டாவது முறையாக இதயநோய் தடுப்பு முகாம் ஒன்றை
நடத்தியது. இந்த முகாமில் சுமார் 200 ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்களது
குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அடிக்கடி மார்பு வலி, மூச்சு விட
சிரமப்படுதல், மார்பு துடிப்பு சீரற்று இருத்தல், தோள்களில் வலி இருத்தல்,
உணர்வற்று இருத்தல், காரணமின்றி வியர்வை வருதல், வாந்தி வருவது போன்ற அறிகுறிகள்
உள்ளதா என்று ரத்த அழுத்தம், ரத்த நீரிழிவு, மற்றும் ஈசிஜி போன்ற பரிசோதனைகள்
மூலம் சோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு இருதய நோய் தடுப்பு ஆலோசனை
வழங்கப்பட்டது. அவர்களில் சுமார் 30 பேருக்கு இருதய நோய்க்கான அறிகுறிகள்
இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் அல்லது இருதய அறுவை
சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இந்த முகாம் பங்களூர் நாராயண ஹிருதயாலயா மருத்துவமனை மருத்துவர்கள் திருமதி லட்சுமி ஜெயின், திரு சுதாகர், மற்றும் அவர்களது மருத்துவ தொழில்நுட்பக் குழுவினருடன், சேலம் கோட்ட கூடுதல் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் திரு. எம். நரசிம்மம், அவர்களது தலைமையிலான மருத்துவர்கள், மற்றும் சேலம் கோட்ட மருத்துவத்துறை ஊழியர்களின் மேற்பார்வையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
சேலம் கோட்ட ஊழியர்கள்
மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களது உடல்நலம் காக்க இத்தகு சிறப்பு மருத்துவ முகாம்களை
நடத்தும் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்திற்கு தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment