Monday 16 June 2014

Salem Division, Southern Railway, completes track renewal works in record time





SALEM DIVISION, SOUTHERN RAILWAY, COMPLETES TRACK RENEWAL WORKS IN RECORD TIME

            The railway track from Salem to Jolarpat, near Samalpatti Railway Station, was renewed with a new track for a distance of about 2.5 kms. within a record time of 4 days, by the Engineering Branch of Salem Division, Southern Railway,  using the most modern machinery, taking minimum time every day, duly ensuring that the passenger traffic was not disturbed in any way. Had the work been done manually, it would have taken a minimum of 2 months, resulting in heavy labour cost and disruption of train services for a longer time. The existing track was more than 20 years old and was in need of replacement to take heavier axle load. The modern track replacement machine called TRT (Track Renewal Train) machine was employed in replacement of this track at the rate of 300 meters per hour, taking only 5 hours of work a day. The machine was purchased by railways in the year 2007, at a cost of Rs.25 Crores approx. As against the original estimated time of 5 days starting from 9th of June, 2014, the work was completed within a record time of 4 alternative days i.e. on 16th of June, 2014. The quality and completion of the work and was exactly as per the plan, without compromising on either safety or operation of trains.  The works, including the track implements for a length of 2.5 kms. is completed at a cost of Rs.5 Crores.

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் ரயில் தட மாற்றப் பணிகளை குறைந்த நேரத்தில் முடித்து சாதனை
      சேலம் ஜோலார் பேட்டை இடையே சாமல்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ள சுமார் 2.5 கிமீ தூரத்திற்கு ரயில்தடம் அதி நவீன ரயில் தடம் புதுப்பிக்கும் எந்திரத்தை கொண்டு சேலம் கோடட பொறியியல் பிரிவு பொறியாளர்களால் நான்கே நாட்களில் முடித்து சாதனை செய்யப்பட்டுள்ளது. இப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, ஒவ்வொரு நாளும் குறைந்த பட்ச நேரமே எடுத்துக் கொள்ளப்பட்டு, பயணிகள் ரயில் சேவை எவ்விதத்திலும் பாதிக்காமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இப் பணிகள் இயந்திரத்தின் உதவியின்றி பணியாளர்களைக் கொண்டு மட்டுமே செய்யப்பட்டிருந்தால், குறைந்த பட்சம் இரண்டு மாதங்களாவது தேவைப்பட்டிருப்பதுடன், அதிக அளவில் பணியாளர்கள் பயன்பாடும், பயணிகள்  ரயில் சேவையில் பாதிப்பும் ஏற்பட்டிருக்கும்.  இதற்கு முன் இருந்த ரயில்தடம் சுமார் 20 ஆண்டுகள் பழமையானதால், அதிக அளவு பாரம் தாங்குவதற்காக புதியதாக மாற்றப்பட வேண்டியிருந்தது. இந்த அதி நவீன இயந்திரத்தின் உதவியால் ஒரு மணி நேரத்திற்கு 300 மீட்டர்கள் வீதம் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த இயந்திரம் தெற்கு ரயில்வேயால் 2007ம் ஆண்டு சுமார் 25 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டது.  ஒரு நாள் விட்டு மறுநாள் பணிகளை மேற்கொள்ளும் முறையில் ஜூன் மாதம் 9ம் தேதி துவக்கப்பட்டு 5 நாட்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்த ரயில் தட மாற்றப் பணிகள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு முன்னதாகவே 4 நாட்களில் அதாவது ஜூன் மாதம் 16ம் தேதியே முடிக்கப்பட்டுள்ளது ஒரு சாதனையாகும்.  திட்டமிட்டபடியே பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு மற்றும் பயணிகள் ரயில்சேவைக்கு எந்த பாதிப்பு இல்லாமல் 2.5 கிமீ தூரத்திற்கு ரயில் தடம் மாற்றும் பணிகள் அனைத்து செலவுகளும் உட்பட 5 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment